sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தி.மு.க., - அ.தி.மு.க., போட்டியால் பயன்பாட்டிற்கு வராத ஆர்.ஓ., மையம்

/

தி.மு.க., - அ.தி.மு.க., போட்டியால் பயன்பாட்டிற்கு வராத ஆர்.ஓ., மையம்

தி.மு.க., - அ.தி.மு.க., போட்டியால் பயன்பாட்டிற்கு வராத ஆர்.ஓ., மையம்

தி.மு.க., - அ.தி.மு.க., போட்டியால் பயன்பாட்டிற்கு வராத ஆர்.ஓ., மையம்


ADDED : நவ 18, 2024 01:46 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அருகே, ஆர்.ஓ., மையத்தை திறக்க, தி.மு.க., - அ.தி.மு.க., இடையே போட்டி நிலவுவதால், பயன்பாட்டிற்கு வராமல் கூடுதல் விலை கொடுத்து, மக்கள் நீரை வாங்கி, பயன்ப-டுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே, 8 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை கடந்த ஆக., 8ல் திறக்க, தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்தனர். அதற்காக கட்சி சார்பில் பேனர்களை வைத்தனர். சூளகிரி வேப்பனஹள்ளி தொகுதிக்குள் வருவதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி தான் ஆர்.ஓ., குடிநீர் மையத்தை திறக்க வேண்டும் என கூறிய, அ.தி.மு.க.,வினர், தி.மு.க.,வினர் ஏற்கனவே ஆர்.ஓ., மையத்-திற்கு போட்டு வைத்திருந்த பூட்டிற்கு மேல், மற்றொரு பூட்டை போட்டனர். இதனால் அங்கு, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே தகராறு ஏற்படும் நிலை உருவானது.அதனால், ஆர்.ஓ., குடிநீர் மையம் திறக்கப்படாமல், தற்போது வரை மூடி கிடக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே ஆர்.ஓ., மையத்தை திறக்க போட்டி நிலவுவதால், மக்கள் பயன்-பாட்டிற்கு இதுவரை வரவில்லை. இந்த ஆர்.ஓ., மையத்தில், 5 ரூபாய் செலுத்தினால், 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மக்க-ளுக்கு கிடைக்கும். ஆனால் வெளிச்சந்தையில், 30 ரூபாய் வரை கொடுத்து, 20 லிட்டர் வாட்டர் கேன்களை, மக்கள் வாங்கி வரு-கின்றனர். எனவே, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் போட்டி மனப்-பான்மையை கைவிட்டு, ஆர்.ஓ., மையத்தை உடனடியாக திறக்க, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us