/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 01, 2024 02:13 AM
த்தங்கரை:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஊத்தங்கரையில், தி.மு.க., சார்பில், நாடாளுமன்ற தேர்தலை
முன்னிட்டு, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் தலைமை
வகித்தார்.
கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில்
அதிகப்படியான ஓட்டுகள் பெறுவது குறித்து, இளைஞர் அணி மாநில துணை
அமைப்பாளர் சீனிவாசன் பல்வேறு ஆலோசனைகளை கூறினார்.
இதில், தெற்கு
ஒன்றிய செயலாளர் ரஜினிசெல்வம், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவர்
அமானுல்லா, முன்னாள் எம்.எல்.ஏ., நரசிம்மன், மாவட்ட பொருளாளர் கதிரவன்,
மாவட்ட துணைச்செயலாளர் சந்திரன், மத்துார் ஒன்றிய செயலாளர்
வசந்தராசு, நகர அவைத்தலைவர் தணிகை குமரன் மற்றும் தி.மு.க., ஒன்றிய,
நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

