/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., நகர நிர்வாகிகள் கூட்டம்
/
தி.மு.க., நகர நிர்வாகிகள் கூட்டம்
ADDED : டிச 27, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, டிச. 27-
கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர நிர்வாகிகள் கூட்டம், நகராட்சி தலைவர் பரிதாநவாப் முன்னிலையில், நகர செயலாளர் நவாப் தலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு பாதாள சாக்கடை விரிவாக்க திட்ட பணிகள், காய்கறி சந்தை அங்காடிகள் திட்டங்களை துவக்கி வைத்த அமைச்சர்கள் நேரு, சக்கரபாணிக்கு நன்றி தெரிவிப்பது, கிருஷ்ணகிரி நகரில், தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டுகள் வாங்கி தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், நகர அவைத்தலைவர் மாதவன், பொருளாளர் கனல் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.