/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அமைச்சர்களை வரவேற்க வாருங்கள் தி.மு.க., மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
/
அமைச்சர்களை வரவேற்க வாருங்கள் தி.மு.க., மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
அமைச்சர்களை வரவேற்க வாருங்கள் தி.மு.க., மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
அமைச்சர்களை வரவேற்க வாருங்கள் தி.மு.க., மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
ADDED : டிச 21, 2024 03:03 AM
கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணியை வர-வேற்க திரண்டு வாருங்கள்' என, மாவட்ட செயலாளர் மதிய-ழகன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி நகராட்சியில், 49.86 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட, 2ம் கட்ட பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் அண்ணா-துரை சிலை எதிரில் இன்று காலை 10:15 மணிக்கு நடக்கிறது.
விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கர-பாணி முன்னிலை வகிக்கிறார். இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்-துறை அமைச்சர் கே.என். நேரு, பாதாள சாக்கடை திட்ட பணி-களை தொடங்கி வைக்கிறார். மேலும் கிருஷ்ணகிரி நகராட்சி சந்-தைபேட்டையில், 1.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தினசரி காய்கறி அங்காடிகளை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து நாகோஜனஹள்ளி டவுன் பஞ்., அலுவலக கட்ட்ட பணி, நாகோஜனபஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள், நூலக கட்டடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். மேலும் கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் வழித்தட நீட்டிப்பு மாற்றம் செய்யப்பட்ட பஸ்-களை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
அமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நகர செயலாளர் அழைப்பு
கிருஷ்ணகிரி நகர தி.மு.க., செயலாளர் நவாப் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரியில், 17 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்-பட்ட அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் அண்ணாதுரை சிலை எதிரில் இன்று நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளில் நகராட்சித்துறை அமைச்சர் நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி நகர தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், நக-ராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.