/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
/
தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம்
ADDED : பிப் 28, 2024 02:24 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
டோல்கேட் அருகில், கலைஞர் திடலில் நேற்று கிருஷ்ணகிரி, தி.மு.க.,
கிழக்கு மாவட்டம் சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட
அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர்
மதியழகன், தி.மு.க., ஆட்சியின் செயல்திட்டம், தமிழக பட்ஜெட், தமிழ்
புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து, தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரம்
மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலாளர் விஜய் பேசியதாவது:
கிருஷ்ணகிரி
லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி,
தன் மகனை, அ.தி.மு.க., வேட்பாளராக களமிறக்க உள்ளார் என்ற தகவல்
வருகிறது. அவரது செயல்பாடுகள் பிடிக்காமல் அக்கட்சியை சேர்ந்த பலர்
வெளியேறுகின்றனர்.
முனுசாமியோ மகனை களமிறக்க தயாராகி
வருகிறார். நம் கட்சி தலைமை, கிருஷ்ணகிரி தொகுதியை, தி.மு.க.,வுக்கு
ஒதுக்கும். அப்போது அவர்களை டிபாசிட் இழக்க வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் உள்பட, 750க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

