/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் நாளை தி.மு.க., அவசர செயற்குழு
/
கிருஷ்ணகிரியில் நாளை தி.மு.க., அவசர செயற்குழு
ADDED : நவ 17, 2024 02:17 AM
கிருஷ்ணகிரி, நவ. 17-
கிருஷ்ணகிரியில் நாளை (18ம் தேதி) ஒருங்கிணைந்த மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டத்தில், அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று பேசுகிறார்.
இது குறித்து கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவ ட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நாளை (18ம் தேதி) பிற்பகல், 12:00 மணியளவில் கிருஷ்ணகிரி, சென்னை சாலையிலுள்ள ஸ்ரீதேவராஜ் மகாலில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர்கள் தட்ரஹஅள்ளி நாகராஜ், யுவராஜ் தலைமை வகிக்கின்றனர். மாவட்ட செயலாளர்கள் மதியழகன் எம்.எல்.ஏ., பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கின்றனர்.இதில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று, கட்சி வளர்ச்சி பணிகள், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை வரும், 27ல், சிறப்பாக கொண்டாடுவது, அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு டிச., 5ல் வருகை தரவுள்ளது குறித்து பேச உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த, அனைத்து நிர்வாகிகளும், தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.