/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 16, 2024 07:06 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், காங்., வேட்பாளர் கோபிநாத்திற்கு ஆதரவாக, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ராயக்கோட்டையில் நேற்று முன்தினம், மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலையில், 500க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணைந்தனர்.
தொடர்ந்து, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செம்பரசனப்பள்ளியிலுள்ள சாக்கம்மா கோவிலில், சூளகிரி வடக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று நடந்தது. நெரிகம், குடிசாதனப்பள்ளி, ராமன்தொட்டி, செம்பரசனப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், 'இண்டியா' கூட்டணி வேட்பாளர் கோபிநாத், பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற, தி.மு.க., அரசின் சாதனைகளை, வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்று, கை சின்னத்திற்கு ஆதரவு கேட்க வேண்டும் என, மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.
லோக்சபா தொகுதி பொறுப்பாளர் பார் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, ஒன்றிய செயலாளர் நாகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

