/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
/
தி.மு.க., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
ADDED : நவ 04, 2024 05:59 AM
கிருஷ்ணகிரி: கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், சட்டசபை தேர்தல் - 2026 தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று கிருஷ்ணகி-ரியில் நடந்தது. கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதிய-ழகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் திருப்பத்துார் தேவகுமார், பர்கூர் பொறுப்பாளர் கோபி, ஊத்தங்கரை பொறுப்-பாளர் ரமேஷ் ஆகியோர், 2026 சட்டசபை தேர்தல் தொடர்பான, வழிமுறைகளை எடுத்துக் கூறினர்.கூட்டத்தில், துணை முதல்வராக உதயநிதியை நியமித்ததற்கு, முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.
கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை தொகுதி பொறுப்பாளர்களை நியமித்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது. 2026 சட்டசபை தேர்-தலில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை தொகுதிகளில் வெற்றி பெற்று, முதலமைச்சரிடம் வெற்றியை சமர்ப்பிப்பது. 3 தொகுதி-களுக்கும் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடனும் இணைந்து திறம்பட தேர்தல் பணியாற்றுவது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பாக நடக்கவுள்ள பணிகளை திறம்பட மேற்-கொள்வது.
முதல் கட்டமாக பி.எல்.ஏ., 2 பட்டியலை சரிபார்த்து திருத்தங்-களை மேற்கொண்டு, விபரங்களை மாவட்ட செயலாளர் மூலம், தலைமைக்கு அனுப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.