/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதல்வர் வருகையையொட்டி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
/
முதல்வர் வருகையையொட்டி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
முதல்வர் வருகையையொட்டி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
முதல்வர் வருகையையொட்டி தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
ADDED : செப் 04, 2025 01:18 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இம்மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது, அரசின் சார்பில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டுமனைப்பட்டா போன்றவற்றை வழங்க உள்ளார்.
தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். மாவட்டத்திற்கு வருகை தரும், தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில் பேலகொண்டப்பள்ளியில் நடந்தது.
தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, பேரூர் பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பெரும் திரளாக பங்கேற்று, தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க,
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தளி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்
சீனிவாசலுரெட்டி, ஒன்றிய செயலாளர்கள் திவாகர், ராஜா, ஸ்ரீதர் சீனிவாசன், தஸ்தகீர்
உட்பட பலர் பங்கேற்றனர்.