/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் தி.மு.க., நிர்வாகிகள் இன்று ஆலோசனை கூட்டம்
/
ஓசூரில் தி.மு.க., நிர்வாகிகள் இன்று ஆலோசனை கூட்டம்
ஓசூரில் தி.மு.க., நிர்வாகிகள் இன்று ஆலோசனை கூட்டம்
ஓசூரில் தி.மு.க., நிர்வாகிகள் இன்று ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 07, 2024 03:18 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், பூத் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (அக்.7) ஓசூரில், தளி சாலையிலுள்ள சென்னீஸ் மகாலில் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு ஓசூர் சட்டசபை தொகுதிக்கும், நண்பகல், 12:00 மணிக்கு தளி சட்டசபை தொகுதிக்கும், மதியம், 3:00 மணிக்கு வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
எனவே, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும். கூட்டத்தில், நடந்து முடிந்த
பார்லிமென்ட் தேர்தல் குறித்தும், ஓசூர், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில், கருணாநிதி உருவச்சிலை வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.