/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் இல்ல திருமண விழா
/
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் இல்ல திருமண விழா
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் இல்ல திருமண விழா
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் இல்ல திருமண விழா
ADDED : டிச 06, 2024 07:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., துணை செயலாளரும், வேப்பனஹள்ளி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முருகன் - ஜெயபிரபா தம்பதியின் மகனும், மேற்கு மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளருமான டாக்டர் அர்விந்த்துக்கும், திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா முத்தனப்பள்ளி டோல்கேட் முரளி - லலிதா தம்பதியரின் மகள் மகாலட்சுமிக்கும், நேற்று கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகில் திருமணம் நடந்தது. வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வாழ்த்தினார்.
மேற்கு மாவட்ட, தி.மு.க., துணை செயலாளர் முருகன் வரவேற்றார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமண விழாவில் அனைவருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. விழாவில், எம்.பி.,க்கள் காங்., கோபிநாத், தி.மு.க., மணி, எம்.எல்.ஏ.,க்கள் ராமச்சந்திரன், எழிலரசன், நல்லதம்பி, மாநகராட்சி மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செங்குட்டுவன், தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன், மூர்த்தி, மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் மாதேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., உள்பட பலர் பங்கேற்றனர்.