/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'சிறப்பான திட்டங்களால் தமிழகத்தை தலைநிமிர செய்துள்ளது தி.மு.க., அரசு'
/
'சிறப்பான திட்டங்களால் தமிழகத்தை தலைநிமிர செய்துள்ளது தி.மு.க., அரசு'
'சிறப்பான திட்டங்களால் தமிழகத்தை தலைநிமிர செய்துள்ளது தி.மு.க., அரசு'
'சிறப்பான திட்டங்களால் தமிழகத்தை தலைநிமிர செய்துள்ளது தி.மு.க., அரசு'
ADDED : ஏப் 17, 2024 12:39 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணி, காங்., வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரியில் பிரசாரத்தை துவக்கி வைத்து, வீதி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், பேசியதாவது: தலைசிறந்த திட்டங்கள் மூலம், தி.மு.க., அரசு தமிழகத்தை தலைநிமிர செய்துள்ளது. ஆனால் பாரதத்தை படுகுழியில் தள்ளியது, பா.ஜ., அரசு. தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்துள்ளது தமிழக அரசு. ஆனால், பணக்காரர்களுக்கு, பா.ஜ., அரசு பல்லக்கு துாக்குகிறது.
மகளிர் உரிமைத்தொகை, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தில் உதவித்தொகை என கல்விக்கும், பெண்களுக்கும் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்கிறது தமிழக அரசு. ஆனால் ஜாதி, மத ரீதியில் பெண்களை இழிவு படுத்துகிறது, மத்திய, பா.ஜ., அரசு.
காங்., கட்சி தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு விலக்கு, ஏழை குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'இண்டியா' கூட்டணியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் கைகாட்டும் நபர் பிரதமரானதும், இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, ஒரப்பம், பாலிநாயனப்பள்ளி, கங்கலேரி பாலக்குறி, மோரமடுகு உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட பகுதிகளில், தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், லோக்சபா தொகுதி பொறுப்பாளர் இளங்கோவன், காங்., கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

