/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நான்கு ஆண்டுகளில் தி.மு.க., எதையும் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: முனுசாமி
/
நான்கு ஆண்டுகளில் தி.மு.க., எதையும் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: முனுசாமி
நான்கு ஆண்டுகளில் தி.மு.க., எதையும் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: முனுசாமி
நான்கு ஆண்டுகளில் தி.மு.க., எதையும் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது: முனுசாமி
ADDED : மே 12, 2025 02:41 AM
கிருஷ்ணகிரி: ''தி.மு.க., அரசு நான்காண்டுகளில், எதையும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார்.
கிருஷ்ணகிரியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
உலக அரங்கில், இந்தியா வலிமை மிக்க நாடு என்பதை நிரூ-பிக்கும் வகையில், பிரதமர் மோடியின் செயல்பாடு உள்ளது. அவரது அனுபவம், ராஜதந்திரத்தால் பாகிஸ்தானை எதிர்-கொண்டு வெற்றி நடைபோடுகிறார். இந்திய ராணுவத்திற்கு, அ.தி.மு.க., சார்பில் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தி.மு.க., ஆட்சியில் என்ன செய்-துள்ளார்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை.
ஆனால், நான்காண்டு ஆட்சி செய்த, இ.பி.எஸ்., கிருஷ்ணகி-ரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், 300 கோடி ரூபாய் மதிப்பில் தென்பெண்ணை ஆற்றின் நீரை ஏரிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், எண்ணேகொள் கால்வாய் திட்டம், அலி-யாளம் கால்வாய் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்-டங்கள் தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படாமல் முடங்கியுள்-ளது.
நான்கு ஆண்டுகளில், தி.மு.க., எதையும் செய்யவில்லை. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அன்றாடம் கொலை, கொள்ளை நடக்கிறது இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் தி.மு.க.,வின் நான்கு ஆண்டு கால சாதனை. முன்னாள் கலெக்டர் சகாயம், நீதி-மன்றத்திற்கு செல்ல முடியாமல் அச்சப்படும் சூழ்நிலை உள்-ளது. அவர் பாதுகாப்பு கேட்கிறார் என்றால், இந்த ஆட்சியின் அவல நிலை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு, இது ஒன்றே எடுத்துக்காட்டு.
ஜாதி, மதவாத சக்திகளோடு ஒரு போதும் தேர்தல் கூட்டணி கிடையாது எனக்கூறும் திருமாவளவன், தி.மு.க.,வின் கொள்கை-யோடு முழுமையாக ஒத்துப்போகிறாரா அல்லது கூட்டணிக்காக சேர்ந்து இருக்கிறோம் என சொல்கிறாரா என்பதை தெளிவுப் ப-டுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.