/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஆபாசத்தை பேசி தான் தி.மு.க., வளர்ந்திருக்கிறது'
/
'ஆபாசத்தை பேசி தான் தி.மு.க., வளர்ந்திருக்கிறது'
ADDED : ஏப் 22, 2025 01:38 AM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நேற்றிரவு, பா.ஜ.,வில் வக்கீல்கள் இணையும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற, பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நிருபர்
களிடம் கூறியதாவது: காங்., கட்சியை அழிக்க, தி.மு.க.,வை துவங்கினர். தி.மு.க.,வை அழிக்க, ம.தி.மு.க.,வை துவங்கினர். பொன்முடி கூறியதை எப்படி வாயால் கூற முடியாதோ, அதேபோல், கம்யூ., கட்சியை பற்றி, ஈ.வே.ரா., கூறியதை சொல்ல முடியாது. தி.மு.க., பேசுவது, ஈ.வே.ரா.,வின் திராவிடம். அ.தி.மு.க., பேசுவது அண்ணா திராவிடம். அ.தி.மு.க.,விற்கும், பா.ஜ.,விற்கும் எந்த பிரச்னையும் இல்லை.
அ.தி.மு.க., - பா.ஜ., சித்தாந்த ரீதியாக பொருந்தும் கூட்டணி. அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய, சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆபாசத்தை பேசி தான், தி.மு.க., வளர்ந்திருக்கிறது. அமைச்சர் பொன்முடியை பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் பல பிரச்னைகள் உள்ளன. ஆனால், தி.மு.க., மாநில சுயாட்சி என பேசி திசை திருப்புகிறது. 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில், ஒரு மாநிலம் கூட கலைக்கப்படவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் தலைவர்கள் நாகராஜ், முனிராஜ், முன்னாள் மண்டல தலைவர் நாகேந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
கருத்தரங்கம்
ஓசூர்:ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, பாகலுார் ஹவுசிங் போர்டில் கருத்தரங்கம் நடந்தது. மாநகர செயலாளர் மேயர் சத்யா தலைமை வகித்தாார். அவைத்தலைவர் செந்தில்குமார், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., திரைப்பட நடிகர் கரு.பழனியப்பன், வக்கீல் சினேகா, கவிஞர் ராகவேந்திரன், சிந்தலை கவுதமன் ஆகியோர் பேசினர்.