/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., ஐ.டி., விங் கட்டுப்பாட்டு அறை திறப்பு
/
தி.மு.க., ஐ.டி., விங் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ADDED : ஆக 23, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., தகவல் தொழில் நுட்ப அணி சார்பில், அரூர்
கோவிந்தசாமி நகரில், அண்ணா அறிவகம் தி.மு.க., ஐ.டி.,விங் கட்டுப்பாட்டு
அறை திறப்பு விழா நேற்று நடந்தது.தர்மபுரி மேற்கு மாவட்ட செயலர்
பழனியப்பன், கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். மாநில ஐ.டி.,விங் துணை செயலாளர் சுரேஷ் செல்வராஜ், எழில்மறவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஐ.டி., விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் வரவேற்றார். இதில், ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், தென்னரசு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.