/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்தில் சிக்கியவர்களுக்கு தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆறுதல்

ADDED : ஆக 15, 2025 02:28 AM
பர்கூர், பர்கூரில், அ.தி.மு.க., நிகழ்ச்சிக்கு, 35 பேர் மினிலாரியில் சென்றபோது விபத்தில் சிக்கி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் கடந்த, 12ல், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,ன், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயண நிகழ்ச்சி நடந்தது.- இதில் கலந்து கொள்ள போச்சம்பள்ளி அடுத்த கீழ்மயிலம்பட்டியை சேர்ந்த, 35க்கும் மேற்பட்டோர் மினிலாரியில் வந்தனர். அப்போது மினிலாரி சரக்கு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், முருகம்மாள் என்ற மூதாட்டிக்கு இடது கை துண்டானது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் சந்தித்து, ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் மருத்துவ செலவுக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள, சென்னை சென்றதால் உடனடியாக வரமுடியவில்லை எனவும் அவர்களிடம் கூறினார்.
நேற்று முன்தினம், ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, துணை பொதுச்செயலாளர் முனுசாமியும் விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.