/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க.,வினர் ஓட்டுச்சாவடி பிரசாரம்
/
தி.மு.க.,வினர் ஓட்டுச்சாவடி பிரசாரம்
ADDED : டிச 13, 2025 05:30 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், எக்கூர் ஊராட்சியில் என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்-சாவடி பிரசாரம் நேற்று நடந்தது.
வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் துணை செயலாளர் சந்திரன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் காந்தி, ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி ஊத்தங்கரை சட்டசபை தொகுதி அமைப்பாளர் பெருமாள் சாமி, நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி பாக முகவர்கள் கலந்து
கொண்டனர்.

