/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம்
ADDED : ஜூன் 13, 2025 01:22 AM
ஓசூர், கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, வேப்பனஹள்ளி கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், சூளகிரி வடக்கு, தெற்கு ஒன்றியங்கள் மற்றும் கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர்கள் ரகுநாத், கருணாகரன், நாகேஷ், பாக்கியராஜ், சின்ராஜ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், ஓட்டுச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வரும், 2026 சட்டசபை தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று, ஆலோசனைகள்
கூறினார்.
மாவட்ட துணை செயலாளர் முருகன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை தலைவர்கள் சின்னசாமி, புஷ்பா சர்வேஷ் உள்ளிட்ட ஏராளமான, தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.