/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மக்களை ஏமாற்ற தி.மு.க., போராட்டம்'
/
'மக்களை ஏமாற்ற தி.மு.க., போராட்டம்'
ADDED : பிப் 20, 2025 07:31 AM
கிருஷ்ணகிரி: ''தி.மு.க., அரசின் திறமையின்மையை மறைத்து, மக்களை ஏமாற்ற, மத்திய அரசை எதிர்த்து, தி.மு.க., போராட்டத்தில் ஈடு-படுகிறது,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனு-சாமி எம்.எல்.ஏ., கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கரடிஹள்-ளியில் நடந்த, அ.தி.மு.க., பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வை பொறுத்த வரை அண்ணாதுரையின் கொள்கைகளை
பின்பற்றுகிறோம்.
தி.மு.க., அரசின் திறமையின்மையை மறைக்க, மக்களை ஏமாற்ற, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அரசியல் வேறு ஆட்சி வேறு என்பதை உணர்ந்ததால், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டப்பணிகளை செய்ய முடிந்தது. தி.மு.க., ஆட்சியில் போதை பொருட்கள் நடமாட்டமும், பெண்-களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் மட்டும் தான் நிலவுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

