/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாக முகவர்களுக்கு தி.மு.க., பயிற்சி
/
பாக முகவர்களுக்கு தி.மு.க., பயிற்சி
ADDED : நவ 05, 2025 01:37 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகர தி.மு.க., சார்பில், 45 வார்டுகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் பயிற்சி முகாம், ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவில் உள்ள மாநகர, தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது. மாநகர செயலாளர் மேயர் சத்யா தலைமை வகித்தார். அவைத்தலைவர் செந்தில்குமார் துணைச்செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், சாந்தி, பொருளாளர் தியாகராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர்., குறித்து, மாநகர செயலாளர் மேயர் சத்யா விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து, கட்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு, ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

