/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மேற்கு வங்கத்தில் கம்யூ., ஆட்சியை அகற்றியதை போல் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்'
/
'மேற்கு வங்கத்தில் கம்யூ., ஆட்சியை அகற்றியதை போல் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்'
'மேற்கு வங்கத்தில் கம்யூ., ஆட்சியை அகற்றியதை போல் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்'
'மேற்கு வங்கத்தில் கம்யூ., ஆட்சியை அகற்றியதை போல் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும்'
ADDED : ஏப் 01, 2024 03:49 AM
ஆரணி: ''மேற்கு வங்கத்தில், விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்த முயன்றதால், 36 ஆண்டு ஆட்சி செய்த, கம்யூ., ஆட்சி அகற்றப்பட்டது போல், செய்யாறு சிப்காட்டிற்காக விவசாயிகளின் நிலங்களை பறிக்க முயலும், தி.மு.க., ஆட்சி அகற்றத்திற்கு, அது தொடக்கமாக அமையும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூரில், ஆரணி லோக்சபா தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின், பா.ம.க., வேட்பாளர் கணேஷ்குமாருக்கு ஆதரவு திரட்டி நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
திருவண்ணாமலை அடுத்த, செய்யாறு சிப்காட்டிற்கு ஏற்கனவே, 3,000 ஏக்கருக்கு மேல், நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், மேலும், 3,000 ஏக்கர் விவசாய நிலங்களைத்தான் எடுப்பேன் என அரசு அடம் பிடிக்கக்கூடாது. சிப்காட் வேண்டும், வேலைவாய்ப்பு பெருக வேண்டும். அதற்காக விவசாயிகளின் நிலங்களை பறித்து, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. மேற்கு வங்கத்திலே, 36 ஆண்டு தொடர்ந்து ஆட்சி செய்த, கம்யூ., கட்சி, அந்த மாநிலத்தில், நந்தி கிராமம், சிங்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை, கையகப்படுத்த முயன்றபோது, மம்தா பானர்ஜி போராடி கம்யூ., ஆட்சியை அகற்றினார். அது மாதிரி இங்கேயும், இந்த ஆட்சியை, இதோடு ஒரு முடிவுக்கு கொண்டு வர, அதன் தொடக்கமாக, இந்த சிப்காட் போராட்டம் அமையும்.
பா.ம.க., 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டால், எதற்கு, 10.5 சதவீதம், ரேஷன் கடையில், 40 சதவீதம் வன்னியர்கள் பணிபுரிகிறார்கள் என, அமைச்சர் கூறுகிறார். அவர் வரலாறு அப்படி. சிவபெருமான் தலையிலுள்ள பாம்பு கருடனை பார்த்து சவுக்கியமா என, கேட்டது போல் உள்ளது. போராட்டமே என்னுடைய வாழ்க்கை. நேரு, 3 முறை பிரதமராக இருந்தார். அவரது மகள் இந்திரா, 3 முறை இருந்தார். மோடியும், 3வது முறையாக பிரதமராக வரப்போகிறார். தி.மு.க., 3 ஆண்டுகால ஆட்சி குறித்து இந்த தேர்தல் கணிக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

