/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மத்திகிரியில் தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்
/
மத்திகிரியில் தி.மு.க., இளைஞரணி பொதுக்கூட்டம்
ADDED : மார் 31, 2025 02:02 AM
ஓசூர்,: ஹிந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீர-மைப்பில் அநீதி செய்யும் மத்திய அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., இளைஞரணி சார்பில், ஓசூர் மத்தி-கிரி பஸ் ஸ்டாண்டில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று முன்-தினம் இரவு நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுமன் தலைமை வகித்தார். தெற்கு பகுதி செயலாளர் திம்மராஜ் வரவேற்றார். துணை மேயர் ஆனந்தய்யா, மாநகர அவைத்த-லைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா, தலைமை கழக பேச்சாளர்கள் செந்தில்வேல், சீனி-வாசன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர், மத்திய அரசை கண்டித்து பேசினர். மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், பொருளாளர் சுகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.