/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தி.மு.க.,வினர் ஆலோசனை கூட்டம்
/
காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தி.மு.க.,வினர் ஆலோசனை கூட்டம்
காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தி.மு.க.,வினர் ஆலோசனை கூட்டம்
காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய தி.மு.க.,வினர் ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 10, 2024 06:58 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., கட்சி சார்பில், கோபிநாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில், தி.மு.க.,வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணிகள் குறித்து, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மாரசந்திரம் பஞ்., ல் உள்ள நெடுசாலை, நாடுவனப்பள்ளி பஞ்., உட்பட்ட தடத்தரை ஆகிய பகுதிகளில், மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, ஓட்டுப்பதிவிற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், கட்சி நிர்வாகிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று, வீடு, வீடாக, தி.மு.க., அரசின் திட்டங்கள், சாதனைகளை எடுத்துக்கூறி, மக்களிடம் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரிக்க வேண்டும். பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்., வேட்பாளர் கோபிநாத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என, மாவட்ட செயலாளர் பிரகாஷ்
எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டார்.
மாவட்ட துணைச்செயலாளர் முருகன், தொகுதி பார்வையாளர் பார் இளங்கோவன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் ரகுநாத், கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

