தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஊத்தங்கரையில் போட்டி போட்டு நீர்வரத்து கால்வாய் துார்வாரும் பணி

ஊத்தங்கரையில் போட்டி போட்டு நீர்வரத்து கால்வாய் துார்வாரும் பணி

ஊத்தங்கரையில் போட்டி போட்டு நீர்வரத்து கால்வாய் துார்வாரும் பணி


ADDED : அக் 11, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2026 02:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை முனியப்பன் கோவில் பகுதியில் ஏரிக்கு கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் குப்பை கொட்டப்பட்டு, சுகாதார சீர்கேடு நிலவுவதால், அதை சுத்தம் செய்து தர அப்பகுதியினர் அரசுக்கும், பேரூராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்தி வந்தனர். நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்களுடன் இணைந்து, ஊத்தங்கரை பரசனேரி நீர்வரத்து கால்வாய்களை துாய்மைப்படுத்தி துார்வார போவதாக, அண்ணா

மலையின், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

மேலும் இப்பணிகளை முனியப்பன் கோவில் அருகே நாளை காலை, 9:00 மணிக்கு தொடங்க திட்டமிட்டு அதற்கான துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அவசரம் அவசரமாக அதிகாரிகளுடன் முனியப்பன் கோவில் பகுதிக்கு வந்த ஊத்தங்கரை தொகுதி, த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜா, 'வீ தி லீடர்ஸ்' நாளை துாய்மை பணியை தொடங்குவதாக அறிவித்திருந்த இடத்தில், பேரூராட்சி ஊழியர்கள் உதவியுடன் சுத்தம் செய்தார். இதனால் நாளை இந்த இடத்தில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பினர் துாய்மை பணியை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்பணிகள் அவசர

கதியில் நடந்துள்ளதால், மற்ற இடங்களில் திட்டமிட்டப்படி கால்வாய் துார்வாரி கரையோரங்களில் பனை விதை நடும் பணிகளை தொடங்க இருப்பதாக, 'வீ தி லீடர்ஸ்' அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் 'வீ தி லீடர்ஸ்' துண்டு பிரசுரங்களை கண்டு, பணியை தொடங்கிய எம்.எல்.ஏ.,விற்கு நன்றி

தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us