/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய டிரைவர் கைது
/
மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய டிரைவர் கைது
ADDED : அக் 18, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார், இ.எஸ்.ஐ., ரிங்ரோடு சந்திப்பில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக, பொலிரோ பிக்கப் வாகனத்தை ஓட்டியபடி, டிரைவர் மொபைல்போனில் பேசி கொண்டிருந்தார்.
அதனால் வாகனத்தை நிறுத்தி விசாரித்த போலீசார், ஓசூர் சப்-ஜெயில் சாலையை சேர்ந்த டிரைவர் அம்ஜெத் மியா, 35, என்பவரை கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.