/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு நிலத்தில் கழிவுகள் கொட்டிய டிரைவர் கைது
/
அரசு நிலத்தில் கழிவுகள் கொட்டிய டிரைவர் கைது
ADDED : மே 16, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் அருகே, பேகேப்பள்ளியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், தொழிற்சாலை கழிவுகளை டிராக்டரில் கொண்டு வந்து
கடந்த, 5ம் தேதி மாலை, 4:00 மணிக்கு கொட்டி சென்றனர். இதையறிந்த பேகேப்பள்ளி பஞ்., ஊழியர் செல்வராஜ், 48, சிப்காட் போலீசில் நேற்று முன்தினம் மாலை புகார் செய்தார். விசாரணையில், பேகேப்பள்ளி அருகே கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஸ்ரீகாந்த், 28, என்பவர் தொழிற்சாலை கழிவுகளை கொட்டியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.