/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.43 லட்சம் குட்கா கடத்திய டிரைவர் கைது
/
ரூ.1.43 லட்சம் குட்கா கடத்திய டிரைவர் கைது
ADDED : அக் 13, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டாடா ஹாரியர் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்-நாடகா மாநிலம், பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு தடை செய்-யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது.
காரை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹன்வந்த் சிங், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவற்றை பறிமுதல் செய்-தனர்.