/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை, மதுபானம் கடத்திய டிரைவர் கைது
/
புகையிலை, மதுபானம் கடத்திய டிரைவர் கைது
ADDED : ஆக 16, 2025 01:36 AM
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஸ்டேஷன் எஸ்.ஐ., அசோக்குமார் மற்றும் போலீசார், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னாறு அருகே நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த மாருதி பொலினோ காரில் சோதனை செய்த போது, 4,160 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 2,430 ரூபாய் மதிப்புள்ள, 24 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தன. பெங்களூருவில் இருந்து அரக்கோணத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால் காரை ஓட்டி வந்த, அரக்கோணம் அம்மனுார் சீனிவாசன் நகரை சேர்ந்த கவுதம், 24, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, புகையிலை பொருட்கள், மதுபானம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.