/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நிர்வாண வீடியோ வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய டிரைவர் கைது
/
நிர்வாண வீடியோ வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய டிரைவர் கைது
நிர்வாண வீடியோ வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய டிரைவர் கைது
நிர்வாண வீடியோ வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய டிரைவர் கைது
ADDED : நவ 06, 2025 12:52 AM
போச்சம்பள்ளி, பியூட்டி பார்லர் உரிமையாளரின் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக, அவரிடம் மிரட்டல் விடுத்த, கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், தர்மபுரி சாலையில், குள்ளனுாரை சேர்ந்தவர் வெண்ணிலா, 48. 'பியூட்டி பார்லர்' நடத்தி வரும் அவரிடம், அதே பகுதியை சேர்ந்த சமீரா, 33, என்பவர், 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், அவரது கணவர் சிராஜ்தீன், 36, கார் டிரைவராக, 3 ஆண்டுகளாகவும் பணியாற்றி வந்தனர்.
வெண்ணிலாவின் கணவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், கடந்த ஓராண்டிற்கு முன் உடுமலைபேட்டையை சேர்ந்த மாரிகிருஷ்ணன் என்பவரை வெண்ணிலா, 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மாரிகிருஷ்ணனிடம், வெண்ணிலாவின் நடத்தை சரியில்லை. அவர் தவறானவர் என சிராஜ்தீன் கூறியுள்ளார். இதையறிந்த வெண்ணிலா, சிராஜ்தீனை தட்டிக்கேட்டதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வெண்ணிலா சிராஜ்தீன், சமீரா இருவரையும், வேலையை விட்டு நிறுத்தினார்.
அந்த ஆத்திரத்தில், தகாத வார்த்தைகளால் வெண்ணிலாவை திட்டிய சிராஜ்தீன், 'பியூட்டி பார்லரில், நீ நிர்வாணமாக இருந்ததை, நான் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அதை, சமூக வலைதளத்தில் பரப்புகிறேன்' என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து வெண்ணிலா புகார் படி, போச்சம்பள்ளி போலீசார், சிராஜ்தீனை நேற்று காலை கைது செய்தனர்.

