/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
10 ஆண்டாக சரி செய்யப்படாத கிராம சாலையால் மக்கள் அவதி
/
10 ஆண்டாக சரி செய்யப்படாத கிராம சாலையால் மக்கள் அவதி
10 ஆண்டாக சரி செய்யப்படாத கிராம சாலையால் மக்கள் அவதி
10 ஆண்டாக சரி செய்யப்படாத கிராம சாலையால் மக்கள் அவதி
ADDED : நவ 06, 2025 12:52 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டகானுார் கிராமத்திலிருந்து வெள்ளையம்பதி, தர்மபுரி இணைப்பு சாலை வரை உள்ள, 2 கி.மீ., தார்ச்சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
இச்சாலை வழியாக பெருமாள்குப்பம், அம்பேத்கர் நகர், புதுக்காடு, வீரப்பன்கொட்டாய், நொச்சிப்பட்டி ஆகிய கிராம மக்கள் தினமும் நகர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி, கல்லுாரி பஸ்கள் முதல், சிப்காட்டிற்கு செல்லும் பஸ்கள் வரை அனைத்தும் இந்த சாலை
வழியாகதான் செல்கிறது.
சேதமான இச்சாலையால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்லும்போது, விபத்தில் சிக்குவதாக வேதனை தெரிவிக்கின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, சேதமடைந்து கிடக்கும் தார்ச்சாலையை சரிசெய்து கொடுக்க, பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் புலம்புகின்றனர். சேதமடைந்த சாலையை, புதுப்பித்து புதிய தார்ச்சாலை அமைத்து கொடுக்க கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளனர்.

