/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விடுதி குளியலறைகளில் கேமரா பெண் தொழிலாளர் போராட்டம்
/
விடுதி குளியலறைகளில் கேமரா பெண் தொழிலாளர் போராட்டம்
விடுதி குளியலறைகளில் கேமரா பெண் தொழிலாளர் போராட்டம்
விடுதி குளியலறைகளில் கேமரா பெண் தொழிலாளர் போராட்டம்
ADDED : நவ 05, 2025 03:19 AM
ராயக்கோட்டை: விடுதி குளியலறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை கண்டித்து, பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில், ஐபோன் உதிரி பாகம் தயாரிக்கும் 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள், 6,000 பேர், லாலிக்கல் அருகே 'விடியல்' என்ற பெயரில் நிறுவனம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.
இங்கு, 8வது பிளாக் குளியலறைகளில், ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை, தொழிலாளர்கள் நேற்று மாலை கவனித்தனர். இதன் மூலம், பெண் தொழிலாளர்கள் குளிப்பதை படம் பிடித்ததாக தெரிகிறது. கேமரா வைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நிரந்தர பெண் தொழிலாளர்கள், 2,500க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை, 5:00 மணிக்கு விடுதி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் சப் - கலெக்டர் ஆக்ரிதி சேத்தி, எஸ்.பி., தங்கதுரை பேச்சு நடத்தினர். தொழிலாளர்கள் கலைந்து செல்லாமல், இரவு, 9:30 மணிக்கு மேலாகியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்தேகத்தில், விடுதியில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவரை பிடித்து, உத்தனப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

