/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவியருக்கு தொல்லை 'சில்மிஷ' ஆசிரியர் கைது
/
மாணவியருக்கு தொல்லை 'சில்மிஷ' ஆசிரியர் கைது
ADDED : நவ 05, 2025 02:07 AM
கிருஷ்ணகிரி: மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். சின்னமட்டாரப்பள்ளியை சேர்ந்த முருகேசன் 49, கைவினை கலை ஆசிரியராக தொகுப்பூதியத்தில் 2011 முதல் பணியாற்றி வந்தார். இவர். மாணவியரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதாக, கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் போனது.
இதன்படி பள்ளியில் சி.இ.ஓ., முனிராஜ், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கஸ்துாரி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் 'மாணவியரின் புகார் உண்மை' என தெரிந்தது-.
குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் புகாரின்படி பர்கூர் மகளிர் போலீசார் போக்சோவில் முருகேசனை நேற்று கைது செய்தனர்.

