/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்
ADDED : நவ 05, 2025 01:40 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிக்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர்கள் இல்லம் தேடி சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணிகள் மேற்கொண்டனர். அதன்படி காட்டிநாயனப்பள்ளி பஞ்.,ல், வாக்காளர்களுக்கு படிவம் வழங்கும் பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் முன்னதாக அச்சிடப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை வழங்குவர். வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை பெற்று, படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, அதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதன் மூலம் இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவர். கணக்கெடுப்பு காலத்தில் கணக்கெடுப்பு படிவம் தவிர, வேற எந்த ஆவணத்தையும் வாக்காளரிடம் இருந்து சேகரிக்க தேவையில்லை. கணக்கெடுப்பு படிவங்கள் கையொப்பமிட்டு அளித்த அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். வாக்காளர்கள், தங்கள் வீடுகளுக்கு வரும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், தாசில்தார்கள் ரமேஷ் (கிருஷ்ணகிரி), சின்னசாமி (பர்கூர்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

