பழுதான காரிலிருந்து குட்காவை மாற்றியபோது சிக்கிய டிரைவர்
பழுதான காரிலிருந்து குட்காவை மாற்றியபோது சிக்கிய டிரைவர்
ADDED : அக் 01, 2026 03:39 AM
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில், நேற்று காலை மகேந்திரா எக்ஸ்.யு.வி., என்ற கார் சென்றது. அதில், கர்நாடக மாநிலத்திலிருந்து, கோவை மாவட்-டத்திற்கு, 543 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்-களை கடத்தி சென்றனர். ஜெக்கேரி அருகே காலை, 6:00 மணிக்கு சென்ற போது, காரின் டயர் பஞ்சரானதால், சாலை-யோரம் நிறுத்தி விட்டு, மாருதி ஸ்விப்ட் மற்றும் நிசான் என இரு கார்களில், குட்காவை மாற்றி எடுத்து செல்ல டிரைவர்கள் ஏற்பா-டுகளை செய்தனர். தகவலறிந்த கெலமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். இரு கார்களின் டிரைவர்கள் தப்பியோடிய நிலையில், மாருதி சுசூகி ஸ்விப்ட் கார் டிரைவர் மட்டும் போலீ-சாரிடம்
சிக்கினார்.
அவரிடம் விசாரித்த போது, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமார், 32, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 3 கார்கள் மற்றும் அதிலிருந்த, 3.34 லட்சம் மதிப்-புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மகேந்திரா எக்ஸ்.யு.,வி., கார் டிரைவரான ஜித்து, 23, மற்றும் நிசான் கார் டிரைவரான, கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த அமர் ஷெரிப், 26, ஆகிய
இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
