/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க டி.ஆர்.ஓ., அறிவுறுத்தல்
/
பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க டி.ஆர்.ஓ., அறிவுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க டி.ஆர்.ஓ., அறிவுறுத்தல்
பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்க டி.ஆர்.ஓ., அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 03, 2025 01:06 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அரசு தொடக்கப் பள்ளியில், 128 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில், காலை உணவு திட்டத்தில், உணவு வழங்கப்படுகிறது. நேற்று, கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் படி, டி.ஆர்.ஓ., சாதனைகுறள் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர், மெனுவின் படி வழங்கப்பட்ட பொங்கல், பருப்பு சாம்பார் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். அதேபோல் முறையாக உணவு பாத்திரங்கள் மற்றும் உணவு பொருட்கள், காய்கறிகள் முறையாக வழங்கப்படுகிறதா என, காலை உணவு திட்ட பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மாணவர்களுக்கு ஆர்.ஓ., குடிநீர் வழங்க
உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சாமல்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் மாணவர்களுக்கு வழங்கும் உணவு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.
காலை உணவு திட்ட பணியாளர்கள் சரியான நேரத்தில் வந்து, மாணவர்களுக்கு முறையாக உணவு தயாரித்து, சுகாதாரமாக வழங்க அறிவுறுத்தினார். போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா மற்றும் ஆர்.ஐ., வி.ஏ.ஓ., உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.