/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வனத்தில் சிறுத்தை நடமாட்டத்தை ட்ரோன் கேமராவில் கண்காணிப்பு
/
வனத்தில் சிறுத்தை நடமாட்டத்தை ட்ரோன் கேமராவில் கண்காணிப்பு
வனத்தில் சிறுத்தை நடமாட்டத்தை ட்ரோன் கேமராவில் கண்காணிப்பு
வனத்தில் சிறுத்தை நடமாட்டத்தை ட்ரோன் கேமராவில் கண்காணிப்பு
ADDED : நவ 20, 2024 01:44 AM
வனத்தில் சிறுத்தை நடமாட்டத்தை
ட்ரோன் கேமராவில் கண்காணிப்பு
ஓசூர், நவ. 20-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த புளியரசி கிராமம் அருகே, கடந்த, 17 மதியம், 12:10 மணிக்கு,
சூளகிரி - பேரிகை சாலையை சிறுத்தை குட்டி கடந்து சென்றது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர்.
சிறுத்தை குட்டி உள்ளதால், தாய் சிறுத்தையும் உடன் இருக்க வாய்ப்புள்ளது. அதனால், சிறுத்தை குட்டி நடமாட்டத்தை உறுதி செய்து கண்காணிக்க, ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி மற்றும் வனத்துறையினர், செட்டிப்பள்ளி காப்புக்காட்டில், பகல், இரவில் கண்காணிக்கும் வகையிலான நவீன கேமராக்களை நேற்று முன்தினம்
பொருத்தினர்.
தொடர்ந்து ட்ரோன் கேமராக்கள் மூலம், சிறுத்தை, அதன் குட்டி நடமாட்டம் உள்ளதா என, வனச்சரகர் பார்த்தசாரதி உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டு, கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகி உள்ளதா என பார்வையிட்டனர்.