/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மகன் வீட்டிற்கு தீ வைத்த 'போதை' தந்தை கைது
/
மகன் வீட்டிற்கு தீ வைத்த 'போதை' தந்தை கைது
ADDED : ஜூலை 20, 2025 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, வீரமலையை சேர்ந்தவர் காசி, 65. இவரது மகன் ரவி, 40. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மகன் ரவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் போதையில் தகராறில் ஈடுபட்ட தந்தை காசியிடம், ரவி வாக்குவாதம் செய்துள்ளார். ஆத்திரமடைந்த காசி, ரவியின் சிமென்ட் ஷீட் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
இதில் வீட்டிலிருந்த துணி மணிகள், பாத்திரங்கள் எரிந்து நாசமாயின. ரவியின் மனைவி ராதா, 36, நாகரசம்பட்டி போலீசில் அளித்த புகார் படி போலீசார் காசியை கைது
செய்தனர்.