/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
/
கி.கிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கி.கிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
கி.கிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : ஆக 12, 2025 05:06 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 'போதை ஒழிப்பு' உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லுாரியில் நேற்று, 'போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். அவர் அங்கு போதை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, காணொலியில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஒளிபரப்பானது. துணை முதல்வர் உதயநிதி, போதை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை கல்லுாரி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலையில் அரசு மருத்துவ மற்றும் கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.தொடர்ந்து ஜீவா நர்சிங் கல்லூரி மாணவியரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. உதவி கமிஷனர் (ஆயம்) பழனி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மகாதேவன், அரசு மருத்துக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் சந்திரசேகர், மருத்துவக்கல்லுாரி பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.