/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டி.எஸ்.பி., புகார் அளித்தும் நடவடிக்கையில்லை மின்வாரியத்தினர் அலட்சியம்; போலீசார் அதிருப்தி

ADDED : செப் 28, 2024 04:20 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஜக்கப்பன்நகர் போலீஸ் குடியிருப்பின் அருகில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரின், ஒரு கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் முற்றிலும் பெயர்ந்து கடந்த ஒரு ஆண்டாக எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது. இந்த டிராஸ்பார்மரையொட்டி டவுன் இன்ஸ்பெக்டர் வசிக்கும் வீடும் அருகில் மற்ற போலீசாரும் வசித்து வருகின்றனர்.
இக்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால், விபத்து ஏற்படும் முன் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று டவுன் டி.எஸ்.பி., முரளி, மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், புகார் தெரிவித்து, 6 மாதங்கள் கடந்தும் இன்றுவரை இக்கம்பத்தை மாற்ற மின்சாரத்துறையினருக்கு மனம் வரவில்லை. இதனால் போலீசார் அதிருப்தியில் உள்ளனர். அதே போல், கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின்கம்பத்தின் சிமென்ட் பூச்சுகள் முற்றிலும் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்றடித்தால் மின்கம்பம் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த இரண்டு மின்கம்பங்களையும் உடனே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.