ADDED : அக் 14, 2026 04:52 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சநேயர் ஸமேத ராகவேந்திரர் கோவிலில், நவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு துர்கா பூஜை நடந்தது.
இதையொட்டி, வண்ண பொடிகளால் துர்கையம்மன் உருவம் அமைத்து, சுற்றிலும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சென்னை ராகவேந்திர ஆச்சார்யா மற்றும் அவரது குழுவினரால் துர்கா பூஜை நடத்தப்பட்டது. இதில், அர்கலா ஸ்தோத்திரம், நவார்ண மந்திரம், சர்வ மங்கள மந்திரம், தேவி மந்திரம், துர்கா வேத மந்திரம், துர்கா கவச மந்திரம், மன்னிப்பு கேட்கும் மந்திரம் ஆகிய, 7 மந்திரங்கள் ஓதப்பட்டு, பல்வேறு தீபாராதனைகள் காட்டப்பட்டன. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், துர்கை அம்மனை சுற்றி வந்து வேண்டி கொண்டனர். அனைவருக்கும் தீர்த்தப்பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
