டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 14, 2026 04:53 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
டாஸ்மாக் குடோன் முன், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம்
சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை
ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
குடோன் பணியாளர்கள் தலைவர் கணபதி முன்னிலை வகித்தார். சங்க செயலாளர்
சங்கர், பொருளாளர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில்,
இரண்டு ஆண்டுகளாக கூலி வழங்காமல், அனைத்து மதுபான பெட்டிகளையும்
ஸ்கேனிங் செய்து வரும் வேலைக்கு, டாஸ்மாக் நிர்வாகம் ஏற்று கொண்ட படி
கூலியை நிர்ணயித்து, உடனே வழங்க வேண்டும். குடோன் சுமைப்பணி
தொழிலாளர்களுக்கு மதுபான பெட்டிகளை, கடைகளுக்கு அனுப்ப
ஏற்றுக்கூலி, 5 ரூபாய் என்பதை, டெண்டர் விதிகளில் குறிப்பிட வேண்டும்.
இ.எஸ்.ஐ.,
பி.எப்., சட்டப்படி அனைவருக்கும் பிடித்தம் செய்வதை முறைப்படுத்தி
அமல்படுத்த வேண்டும். சட்டப்படி, ஆண்டு போனஸ் தீபாவளி பண்டிகைக்கு,
10 நாட்களுக்கு முன்பே வழங்க வேண்டும். அனைத்து டாஸ்மாக்
குடோன்களிலும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
குளியலறை, கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து
கொடுக்க வேண்டும். 2027 ஜனவரி முதல் இறக்கு கூலி உயர்வை அமல்படுத்தி,
அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
