/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி அருகே நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
/
கிருஷ்ணகிரி அருகே நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
கிருஷ்ணகிரி அருகே நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
கிருஷ்ணகிரி அருகே நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
ADDED : நவ 10, 2024 02:58 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நேற்று மதியம் லேசான நில அதிர்வு உண-ரப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த கடப்பசந்தம்-பட்டி பஞ்., பெத்தபாம்பட்டியில் நேற்று மதியம், 1:32 மணிய-ளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதில் வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. உடனடியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே-றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு கூறுகையில், ''கிருஷ்ண-கிரி மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது உண்மை. ரிக்டர் அளவில், 3.3 ஆக பதிவாகி உள்ளது.
இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. போச்சம்பள்ளி, கிருஷ்-ணகிரி, அரசம்பட்டி, ஊத்தங்கரை மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளிலும், நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வந்தாலும், எந்த பாதிப்பும் இல்லை.
பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.