ADDED : அக் 08, 2024 04:34 AM
ஓசூர்: பாலஸ்தீன மக்கள் மீது, இஸ்ரேல் அரசு, போர் என்ற பெயரில் நடத்தும் இன படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி, கிருஷ்ண-கிரி மாவட்ட, இ.கம்யூ., கட்சி சார்பில், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசினார். மாநில குழு உறுப்பினர்கள் மாதையன், பூதட்டியப்பா, கண்ணு, மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி, மாநகர செய-லாளர் சங்கரய்யா உட்பட பலர் கண்டன கோஷம் எழுப்பினர்.* மா.கம்யூ., சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் நேற்று காலை, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், மேரி ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர்கள் ராஜாரெட்டி, ராஜா, வட்ட செயலாளர்கள் சாமு, பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.