ஸ்ரீ மாருதி கல்வி குழுமத்தில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
ஸ்ரீ மாருதி கல்வி குழுமத்தில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 18, 2026 06:24 AM
கிருஷ்ணகிரி; காமராஜர் பிறந்தநாளான ஜூலை, 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வரு-கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே மாதேப்பள்ளி கூட்ரோட்டில் அமைந்-துள்ள, ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ மாருதி குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி ஆகிய கல்வி குழுமங்களில் சார்பில், கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்-டது.
பள்ளி தாளாளர் ஜெயராமன், பள்ளி தலைவர் தனுஜா ஜெயராமன் தலைமை வகித்தனர். துணை தலைவர் நவீன்குமார், செயலாளர் மேக-மாலா நவீன் குமார் முன்னிலை வகித்தனர். காமராஜர் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர் கல்வி வளர்ச்சி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஜெயராமன் பேசிய-தாவது:
காமராஜர் ஏழை, எளிய விளிம்பு நிலை மாணவ, மாணவியரும் கல்வி கற்க வேண்டும் என எண்-ணினார். அதை மனதில் வைத்தே, மலை கிரா-மங்கள் சூழ்ந்த இப்பகுதியில் நாம் கல்வித்-தொண்டு ஆற்றி வருகிறோம். ஆண்டுதோறும் எத்தனையோ மாணவர்கள், நம் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண்களுடன் பல்வேறு பத-விகளில் உள்ளனர். இதை மாணவர்கள் மனதில் வைத்து கல்வியில் சிறந்து விளங்கி பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் மாலிக், ஆசி-ரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்-டனர்.
