/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிணற்றில் விழுந்தமுதியவர் உயிரிழப்பு
/
கிணற்றில் விழுந்தமுதியவர் உயிரிழப்பு
ADDED : மே 01, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த கரடிகொல்லப்பட்டியை சேர்ந்தவர் பூபதி, 71, விவசாயி. கடந்த, 28ல், விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்ச சென்றவர் மாயமானார். அவரது உறவினர்கள் அவரை தேடி விவசாய கிணறு அருகே சென்றனர்.
அங்கு அவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது. பர்கூர் தீயணைப்பு வீரர்கள் அவரது சடலத்தை மீட்டனர். விசாரணையில் முதியவர் கேட்வால்வை திறந்த போது தடுமாறி கிணற்றில் விழுந்து இறந்தது தெரிந்தது. மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

