/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
ADDED : டிச 15, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக்கில் இருந்து தவறிவிழுந்த மூதாட்டி பலி
ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உப்பராயனப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா மனைவி ஜெயம்மா, 64. கடந்த, 12 மதியம், 1:00 மணிக்கு தனது மகன் வெங்கட்ராஜ், 35, என்பவருடன் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில், தேன்கனிக்கோட்டை - தளி சாலையில் சென்றார். அன்னியாளம் கிராமம் அருகே சென்ற போது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ஜெயம்மா, திடீரென தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், பெங்களூரு நாராயணா இருதாலயா மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.