/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சென்டர் மீடியனில் வாகனம் மோதி மூதாட்டி பலி; 10 பெண்கள் காயம்
/
சென்டர் மீடியனில் வாகனம் மோதி மூதாட்டி பலி; 10 பெண்கள் காயம்
சென்டர் மீடியனில் வாகனம் மோதி மூதாட்டி பலி; 10 பெண்கள் காயம்
சென்டர் மீடியனில் வாகனம் மோதி மூதாட்டி பலி; 10 பெண்கள் காயம்
ADDED : ஆக 02, 2025 01:25 AM
ஓசூர், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே புதுகுடியானுார் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மனைவி சரோஜா, 64, கூலித்தொழிலாளி.
இவரும், அதே பகுதியை சேர்ந்த தெய்வானை, 55, சங்கீதா, 35, பழனியம்மாள், 55, சத்யா, 55, வள்ளியமாள் மற்றும் மாரியம்மன் கோவிலுாரை சேர்ந்த பாக்கியலட்சுமி, 30, அங்கம்மாள், சின்னமெட்டஹள்ளியை சேர்ந்த கோகிலா, 37, சாந்தி, 45, ஆனந்தி ஆகிய, 11 பேர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் முள்ளங்கி விதை நட, நேற்று முன்தினம் காலை வந்தனர். பணி முடிந்து மீண்டும் பிக்கப்
வாகனத்தில் ஊருக்கு திரும்பினர்.காரிமங்கலம் அருகே பெத்தானுாரை சேர்ந்த பார்த்திபன், 24, வாகனத்தை ஓட்டி சென்றார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ஆலுார்-பேரண்டப்பள்ளி சாலையில், புதிதாக பணிகள் நடக்கும் சாட்டிலைட் டவுன் ரோட்டில் சென்ற போது, தின்னுார் கிராமம் அருகே சாலை சென்டர் மீடியனில் வாகனம் மோதி கவிழ்ந்தது.
இதில் மூதாட்டி சரோஜா சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற, 10 பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்து, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹட்கோ போலீசார்
விசாரிக்கின்றனர்.