/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 02, 2025 01:25 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவ, மாணவியர், 286 பேர் ஒரு பிரிவாகவும், 8ம் வகுப்பு மாணவர்கள், 134 பேர், மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு, கட்டுரை, பேச்சு போட்டி, கவிதை எழுதுதல் மற்றும் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 6, 7ம் வகுப்பு பிரிவில் மாணவியர் மேத்தா, மதுஸ்ரீ முதலிடம் பிடித்தனர். 8ம் வகுப்பு பிரிவில் மாணவர்கள் ஜீவா, மெலினா முதலிடம் பெற்றனர்.
அதேபோல் கட்டுரை, கதை கூறுதல், பேச்சுப்போட்டி மற்றும் கவிதை எழுதுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும் நேற்று பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ், மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் மேரிஹேமா, பியூலா, பத்மஜா, பானு, சியாமளா, அனுராதா, சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.