/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானை - மனித மோதல் தடுப்பு விழிப்புணர்வு
/
யானை - மனித மோதல் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 13, 2025 02:04 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம் சார்பில், யானைகள் - மனித மோதல்களை தடுக்கும் வகையில், மரக்கட்டா கிராம ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சிறப்பு விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கால்நடை, மின்சாரம், வருவாய், வேளாண்மைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், யானைகள் குறித்த விழிப்புணர்வு, யானை - மனித மோதல்களை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள் குறித்து, வனத்துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர்.
மூத்த யானை ஆராய்ச்சியாளர் சிவகணேசன், தேன்கனிக்கோட்டையில் செயல்படுத்தி வரும், சோலார் வேலி, யானை அகழிகள் மற்றும் இதர களப்பணிகள் மூலம், எவ்வாறு யானைகளை, விவசாய பூமியில் இருந்து தவிர்க்கலாம் என, ஆலோசனைகளை வழங்கினார்.