/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டையில் யானைகள் அட்டகாசம்
/
தேன்கனிக்கோட்டையில் யானைகள் அட்டகாசம்
ADDED : அக் 16, 2025 01:07 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே தென்னந்தோப்பிற்குள் புகுந்த, இரு யானைகள், 40 மரங்களை சேதப்படுத்தின.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கண்டகானபள்ளியை சேர்ந்தவர் மாதாரெட்டி, 45. இவர் தன் விவசாய நிலம், 5 ஏக்கரில், 5 ஆண்டுகளுக்கு முன் தென்னங்கன்றுகளை நட்டு, டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் சுற்றித்திரியும் இரு யானைகள் தென்னந்தோப்பிற்குள் நுழைந்து, 40 மரங்களை ஒடித்து, தென்னை மட்டைகளை தின்றும் மிதித்தும் நாசமாக்கின. வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் யானைகளை விரட்ட யாரும் வரவில்லை.
இப்பகுதியில் யானைகள், விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருவதாகவும், வனத்துறையினர் உடனடியாக யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டுமெனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.